பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்!

ஜூலை 28, 2018 655

இஸ்லாமாபாத் (28 ஜூலை 2018): பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மஹேஷ் குமார் மலானி, தார்பார்க்கர் என்ற இந்து வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் தேர்தல்களில் முஸ்லிம் அல்லாதோர் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் 16 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது தான் ஒரு இந்து வெற்றி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மஹேஷ் குமார் மலானி, தார்பார்க்கர் -2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட 14 பேரை விழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார்.

மலானி 1,06,630 வாக்குகளைப் பெற்றார். அதற்கு அட்டுத்தபடியாக அராப் சக்குல்லா என்பவர் 87,251 வாக்குகள் பெற்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...