பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்கள் எத்தனை தெரியுமா?

ஆகஸ்ட் 01, 2018 741

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூன்று இந்து வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு கடந்த 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் ஆதிக்கம் மிகுந்த தர்பார்கர் நாடாளுமன்றத் தொகுதியில் மகேஷ் மலானி என்ற வேட்பாளர், சுமார் 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சிந்து மாகாணத் தேர்தலில் மிர்புர்காஸ் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் நெருங்கிய நண்பரான கிர்ஸ்வாரி லால், 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஜம்ஷாரோ மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்ரானி என்பவர், 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக இந்துக்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மூன்று பேரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...