பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம்!

ஆகஸ்ட் 05, 2018 545

டென்மார்க் (05 ஆக 2018): டென்மார்க்கில் பர்தா அணிந்த பெண்ணுக்கு அந்நாடடு அரசு 1,000 கிரோனர் அபராதம் விதித்துள்ளது.

டென்மார்க் நாட்டில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் அளவிலான பர்தா அணிய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், டென்மார்கிலுள்ள ஹோர்ஷோல்ம் நகரிலுள்ள வர்த்தக மையத்தில் 28 வயது பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு 1,000 கிரோனர் (இந்திய ரூபாயில் ரூ 10000 )அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் பர்தாவை நீக்க வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...