BREAKING NEWS: இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

ஆகஸ்ட் 05, 2018 675

ஜகார்த்தா (05 ஆக 2018): இந்தோனேஷியாவில் லம்போக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

கடந்த வாரம்தான் இதே பகுதியில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதில் 12 பேருக்கும் மேல் உயிரிழந்து ஏகப்பட்ட பேர் காயமடைந்தனர். சுமார் 100 கட்டிடங்கள் கடும் சேதமடைந்தமை குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...