இந்தோனேஷியாவில் மீண்டும் நில நடுக்கம் 82 பேர் பலி!

August 06, 2018

லாம்போக்: இந்தோனேஷியாவின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடந்த வாரம்தான் இதே பகுதியில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதில் 12 பேருக்கும் மேல் உயிரிழந்து ஏகப்பட்ட பேர் காயமடைந்தனர். மேலும் சுமார் 100 கட்டிடங்கள் கடும் சேதமடைந்தமை குறிப்பிடத் தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!