பிரதமர் ஆவாரா இம்ரான் கான்? - வலுக்கும் எதிர்ப்பு!

August 06, 2018

இஸ்லாமாபாத் (06 ஆக 2018): இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் ஆவதற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது. 117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைக்க முயற்சி மேற் கொண்டுள்ளார்.

ஆனால், பதவியேற்பில் எதிர்கட்சிகளால் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் சார்பில் பிரதமரை தேர்ந்தெடுக்க முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதனால் இம்ரான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!