இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு!

ஆகஸ்ட் 09, 2018

லாம்போக் (09 ஆக 2018): இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 131 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். , நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!