மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த முஸ்லிம்கள்!

ஆகஸ்ட் 11, 2018 1185

பீஜிங் (11 ஆக 2018): சீனாவில் புகழ் பெற்ற பெரிய மசூதியின் மினாராவை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள மசூதிகளில் நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும். இந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மசூதியின் மினாராவை இடிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு அந்நாட்டு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தற்போது மசூதியில் அமைக்கப்பட்டுள்ள மினராக்களை அகற்றிவிட்டு வேறுமாதிரியான கட்டுமானம் மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த மினராக்களை இடித்துவிட்டால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முற்றுகை போராட்டம் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மிகப்பெரிய அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பெரிய அளவில் அங்கு கொண்டு சென்று போராட்டக் காரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...