இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பலி!

ஆகஸ்ட் 15, 2018 579

ஜெனோவா (15 ஆக 2018): இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இத்தாலியின் ஜெனோவா நகரில் மொரண்டி பாலம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பாலம் 1960ல் கட்டப்பட்டது. இந்த பாலமானது துறைமுகங்களில் இருந்து சரக்குகளை கொண்டுவருவதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மேல் இருந்த வாகனங்களும் பாலத்தின் கீழ் இருந்த வாகனங்களில் இருந்தவர்களிலும் சுமார் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...