இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஆகஸ்ட் 20, 2018 520

லாம்போக் (20 ஆக 2018): இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்று இரவு பத்து மணியளவில் இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அனைவரும் லாம்போக் நகரத்தின் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இது இந்தியர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் வந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்து என்னசெய்வதென்று புரியாமல் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், அதன் இடுக்கில் சிக்கி சில பேர் மோசமாக காயமடைந்தனர். அது மட்டும் அல்லாமல் பல பேர் தன் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இதுவரை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...