அமெரிக்க அதிபர் பதவிக்கு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் மரணம்!

ஆகஸ்ட் 26, 2018 555

நியூயார்க் (26 ஆக 2018): அமெரிக்க அதிபர் போட்டிக்கு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் காலமானார்.

அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் செனட்டருமான ஜான் மெக்கெய்ன் 81 வயதில் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மெக்கெய்ன் மறைவு குறித்து அவரது அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில், ‘செனட்டர் ஜான் சிட்னி மெக்கெய்ன் 3, ஆகஸ்ட் 25, 2018 அன்று மாலை 4:28 மணிக்கு காலமானார். அவரது உடலில் இருந்து உயிர் பிரியும் போது, அவரது மனைவி சிண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெக்கெய்ன் மறைவைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜனநாயக கட்சியின் பாராக் ஓபாமாவுக்கு எதிராகத்தான் குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அதிபராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...