தொலைக்காட்சி பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை!

ஆகஸ்ட் 29, 2018 719

டாக்கா (29 ஆக 2018): வங்க தேசத்தில் பெண் தொலைக் காட்சி செய்தியாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

32 வயது சுபர்ணா நொடி என்ற பெண் பத்திரிகையாளர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து சுபர்ணா நொடியை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். சுபர்ணாவுக்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுபர்ணாவின் படுகொலைக்கு காரணம் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...