பாகிஸ்தானுக்கான உதவித் தொகையை ரத்து செய்தது அமெரிக்கா!

செப்டம்பர் 02, 2018 574

வாஷிங்டன் (02 செப் 2018): பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 மில்லியன் டாலர் உதவித் தொகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக் கொண்டு, தங்களையே ஏமாற்றுவதாக பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய தொகையை மற்ற அவசர விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதற்கு செலவிடப் போவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் ஹக்கானி மற்றும் ஆஃப்கான் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த தவறியதாக பாகிஸ்தானை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமரான இம்ரான் கானை சந்திக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ அங்கு செல்லவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...