ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம் பெண்களுக்கு பிரம்படி தண்டனை!

செப்டம்பர் 04, 2018 601

கோலாலம்பூர் (04 செப் 2018): மலேசியாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இரு பெண்களுக்கு பிரப்படி தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

முஸ்லிம் நாடான மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் 22 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க பெண்கள் ஓரின சேர்க்கையில் (‘லெஸ்பியன்’ )ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் அவர்களை கைது செய்து ‌வழக்குப் பதிவு செய்து ஷரியா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை குற்றவாளி என அறிவித்து. அப்பெண்கள் 2 பேருக்கும் தலா 6 தடவை பிரம்படி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் வைத்தே அவர்களுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...