ஹிஜாபுடன் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்!

செப்டம்பர் 05, 2018 632

லண்டன் (05 செப் 2018): ஹிஜாப் அணிந்து மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் சாரா இஃப்திகார் என்ற முஸ்லிம் பெண்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அழகிப் போட்டியில், சாரா இஃப்திகார் என்ற 20 வயது முஸ்லிம் பெண் பல்வேறு சுற்றுகளின் முடிவில், இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதில், ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்தபடி பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளார்.

சட்ட கல்லூரி மாணவியான சாரா பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்டவர். அழகி போட்டியின் தகுதி சுற்றுகளில், 'ஹிஜாப்' அணிந்து, ஏற்கெனவே போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இறுதி போட்டியில் ஹிஜாப்புடன் பெண் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...