பொது இடங்களில் உறவு வைத்துக் கொள்ளும் ஜோடிகளை தொந்தரவு செய்ய தடை!

செப்டம்பர் 05, 2018 602

மெக்சிகோ (05 செப் 2018): பொது இடங்களில் உறவு வைத்துக் கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது என்று மெக்சிகோ அரசு உத்தரவிட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டில் அண்மையில் கவுதலஜாரா என்ற பகுதியில் பூங்கவில் உடலுறவு கொண்டிருந்த ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கவுன்சிலர் ஒருவர் நகர சபையில் பொது இடங்களில் உடலுறவு கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்தது தொடர்பாக குற்றம்சாட்டினார்.

இதனை அடுத்து பொது இடங்களில் உடலுறவு கொள்ளும் ஜோடிகள் அருகியுள்ளவர்களுக்கு தொல்லை தருவதாக இருந்தால் மட்டும் அவர்களை கைது செய்யலாம் அப்படி யாருக்கும் தொல்லை தராமல் பொது இடத்தில் உடலுறவு கொண்டால் அவர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...