பாரீசில் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 4 பேர் கவலைக்கிடம்!

செப்டம்பர் 10, 2018 407

பாரீஸ் (10 செப் 2018): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தி மற்றும் இரும்பு கம்பி கொண்டு ஒருவர் தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்தவர்களில் இருவர் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.

பாரிஸின் வட கிழக்கு பகுதியில், உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது பயங்கரவாத நடவடிக்கை இல்லை என பாரீஸ் காவ்லதுறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...