ஸ்மார்ட் போன் இறக்குமதிக்கு தடை - இம்ரான்கான் அதிரடி!

September 11, 2018

இஸ்லாமாபாத் (11 செப் 2018): பாகிஸ்தானில் ஸ்மார்ட் போன் இறக்கும்திக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தடை விதித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான நடவடிக்கைகளை செய்து வருகிறார். அதன்படி முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார். அதன்பின் தேவையில்லாத சொகுசு ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்ப்பேன் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இது போல அரசு சம்பந்தமான பல ஆடம்பர பராமரியங்களை தடை செய்தார்.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளார். அதன்படி இனி பாகிஸ்தானில் உற்பத்தி ஆகும் செல்போன்களை மட்டுமே வாங்க முடியும். 1 வருடம் இந்த தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சொகுசு கார், பாலாடைக்கட்டி, வெண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் தடை செய்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது பொருளாதார தட்டுப்பாடு நிலவுகிறது. அவர்களிடம் டாலர் கையிருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இன்னும் அதிக டாலர்களை இழக்க நேரிடும். இது இன்னும் அந்த நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும். இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!