நெருங்கும் அதி பயங்கர புயல்!

September 12, 2018

நியூயார்க் (12 செப் 2018): அமெரிக்காவை அதிபயங்கர புயல் ஒன்று நெருங்குவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது.

ஃப்ளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் இன்னும் சில தினங்களில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். மேலும் கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!