சிரியாவில் மாயமான ரஷ்ய விமானம்!

செப்டம்பர் 18, 2018 996

மாஸ்கோ (18 செப் 2018): ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயமாகியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில், "ரஷ்யாவின் போர் விமானமான Russian Il-20, 14 வீரர்களுடன் சிரியாவிலுள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்குத் திரும்பியது. அப்போது சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 பேருடன் சென்றை இந்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கோணத்திலும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...