பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுதலை!

செப்டம்பர் 19, 2018 547

இஸ்லாமாபாத் (19 செப் 2018): பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோr விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருந்து வருகிறார் நவாஸ் ஷெரீப். இவரது தண்டனையை நிறுத்தி வைத்துள்ள நீதிமன்றம், நவாசுடன் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள அவரது மகள் மரியமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் விடுதலை செய்யப் பட்டுள்ள்னார்.

தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் செய்த மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பு வெளியானது.

முன்னர், கடந்த ஜூலை மாதம், நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாசின் மனைவி குல்சூம் நவாஸ் கடந்த வாரம் லண்டனில் இறந்த நிலையில் இவர்களின் விடுதலைக்கான உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...