ஓடுபாதையை விட்டு கடலுக்குள் சென்ற விமானம்!

செப்டம்பர் 29, 2018 619

மைக்ரோனீசியா (29 செப் 2018): மைக்ரோனீசியாவில் ஓடுபாதையை விட்டு விமானம் கடலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ப்புவா நியூகினியாவை சேர்ந்த ஏர் நியூகினி என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் மைக்ரோனீசியாவில் தரையிறங்கும்போது விமானம் ஓடுபாதையை விட்டு அருகில் உள்ள கடல் பரப்பில் தரையிறங்கியது இந்த விமானத்திலிருந்த 35 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என அனைவரும் எவ்வித தீவிர காயமும் இன்றி உயிர் தப்பினர். அவர்கள் படகுகள் மூலம் மீட்கப் பட்டனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும், விபத்து குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...