அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகமே ஸ்தம்பிக்க வாய்ப்பு!

அக்டோபர் 12, 2018 530

மாஸ்கோ (12 அக் 2018): பராமறிப்பு பணி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என ரஷ்யா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இணையதளத்தை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஒன்றான ஐசிஏஎன்என், சர்வர்களில் இருக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் என்று சொல்லப்படுகிறது. இந்த கீ தான், இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் கருவியாக செயல்படுகிறது.

தொடர்ச்சியாக உலக அளவில் சைபர் க்ரைம்கள் அதிகமாக நடந்து வரும் நிலையில் ஐசிஏஎன்என், இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த பராமரிப்பு செயல் குறித்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ, ‘இந்த பராமரிப்பு பணி என்பது உலக அளவில் இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த பராமரிப்புப் பணி மூலம், உலக அளவில் பல பயனர்களின், இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...