ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு!

அக்டோபர் 17, 2018 754

லாகூர் (17 அக் 2018): பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவளி தூக்கிலிடப் பட்டார்.

கடந்த ஜனவரி 4-ம் தேதி ஆறு வயது சிறுமி ஜைனப் அன்சாரி காணாமல் போனார். ஆனால் அவரது உடல், ஜனவரி 9 அன்று லாகூரின் தெற்கே உள்ள கசூர் நகரில் குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஜைனப் வன்புணர்ந்து கொல்லப் பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக இம்ரான் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டது பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. அந்தப் போராட்டங்களின்போது ஏற்பட்ட கலவரங்களில் இருவர் உயிரிழந்தனர்.

ஜைனப் மட்டுமல்லாது, இச்சம்பவத்துக்கு முன்பே, ஓராண்டுக்கும் மேலாக அந்த நகரில் பல சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட குற்றச் சம்பவங்களிலும் இம்ரான் அலிக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகளும் முதலமைச்சரும் அப்போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குற்றவாளி இம்ரான் அலி , லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறைச்சாலையில் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பொதுமக்கள் முன்பு இம்ரான் அலியை தூக்கிலிட வேண்டும் என்று சிறுமியின் தந்தை அமீன் தாக்கல் செய்த மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...