கல்லூரி வளாகத்தில் குண்டு வெடிப்பு - 19 பேர் பலி!

அக்டோபர் 18, 2018 576

கிரீமியா (18 அக் 2018): ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரீமியாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

கெர்ச் நகரத்தில் தான் படிக்கும் கல்லூரிக்குள் நேற்று புகுந்த விலாடிஸ்லவ்( Vlosdilav) என்ற மாணவர் திடீரென ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். தொடர்ந்து தனது கையில் இருந்த துப்பாக்கியால் மாணவர்களையும் பொதுமக்களையும் நோக்கி சுடத்தொடங்கினார். இதில் அங்கிருந்த மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன்பிறகு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவனும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

எதற்காக இந்த கொலை வெறித் தாக்குதல் நடைபெற்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...