மசூதியை தீ வைத்து சேதப் படுத்தியவருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை!

அக்டோபர் 19, 2018 715

சிகாகோ (19 அக் 2018): மசூதியை தீ வைத்து சேதப் படுத்திய குற்றவாளிக்கு சிகாகோ நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிக் செண்டர் மசூதி ஒன்று கடந்த ஆண்டு தீ வைத்து கொளுத்தப் பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மார்க் ப்ரெஸ் என்பவரை கைது செய்தனர்.

சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் செய்தது மார்க் ப்ரெஸ் என்பவர்தான் என்பது உறுதியானதை அடுத்து, அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேதப் படுத்தப் பட்ட மசூதி தொடர்பாக சமூக வலைத் தளங்களில் செய்தி பரவியதை அடுத்து சுமார் 90 நாட்டு மக்களின் உதவியுடன் மீண்டும் மசூதி கட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.

 

An arsonist convicted of burning down a Texas mosque last year was sentenced Wednesday to more than 24 years in prison for a crime prosecutors said was motivated by hate.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...