பாகிஸ்தானில் நில நடுக்கம்!

அக்டோபர் 21, 2018 440

இஸ்லாமாபாத் (21 அக் 2018): பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...