188 பயணிகளுடன் நடு வானில் வெடித்துச் சிதறிய விமானம்!

அக்டோபர் 29, 2018 756

ஜகார்த்தா (29 அக் 2018): இந்தோனேஷியாவில் நடுவானில் பயணிகள் விமானம் வெடித்துச் சிதறியதில் 188 பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.

Lion Air flight JT 610 : இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றது. 188 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும்.

இந்நிலையில் 188 பயணிகளுடன் விண்ணில் சென்ற விமானம் நடுவானில் நொருங்கி சிதறியுள்ளது.. கடலுக்குள் வீழ்ந்த விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டன. தேடுதல் வேட்டை தீவிரப் படுத்தப் பட்டுள்ளன, பயணிகள் உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகமே என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...