யோகா மையத்தில் துப்பாக்கிச் சூடு - கொலையாளி உட்பட 3 பேர் பலி!

நவம்பர் 03, 2018 530

புளோரிடா (03 நவ 2018): அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் உள்ள யோகா மையத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர் மேலும் கொலையாளி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸியில் யோகோ பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை திடீரெனப் நுழைந்த ஒருவர் அங்கே பயற்சியில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.

கடைசியில் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...