அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி!

November 07, 2018

நியூயார்க் (07 நவ 2018): அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் அதிபர் ட்ரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்கிழமை நடந்த தேர்தல் வாக்கெடுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்பட்டது. தேர்தல் சக்கரத்தில் பெண்களுக்கான ஆண்டு என்று கூறப்பட்ட நடப்பு ஆண்டில் பெண் வேட்பாளர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் 80 சதவிகித உறுப்பினர்கள் என்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள். அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் வெறும் 20% மட்டுமே.

அமரிக்க காங்கிரசின் பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் டிரம்பின் சட்டமியற்றும் திட்டங்களுக்கு அந்தக் கட்சி முட்டுக்கட்டைகள் போட முடியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது

முக்கியமான குழுக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும். டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு ரஷ்யா உதவியதான குற்றச்சாட்டு குறித்து அவர்களால் தற்போது விசாரிக்க முடியும். டிரம்பின் தனிப்பட்ட நிதி நிலையும் தற்போது அவர்களது விசாரணைக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!