பட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது!

நவம்பர் 08, 2018 585

சிங்கப்பூர் (08 நவ 2018): சிங்கப்பூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த இந்தியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்ற பகுதியில் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த செவ்வாய் அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், செல்வராஜூ மற்றும் சிவக்குமார் சுப்பிரமணியன் என்ற இரு இந்தியர்கள், அப்பகுதியில் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையின் நடுவே வானத்தில் சென்று வெடிக்கும் வகையிலான பட்டாசு வெடித்துள்ளனர்.


இதைப் படிச்சீங்களா? : பூமிக்குக் கீழே செல்கிறது சிங்கப்பூர் நகரம்! - Inneram.com Exclusive!


சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு வெடிப்பது குற்றம் என்பதால், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...