வாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்!

நவம்பர் 15, 2018 1132

வியட்நாம் (15 நவ 2018): வியட்நாமில் மனைவி வாடகைக்கு கிடக்கும் என்ற விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமில் தனியார் நிறுவனம் ஒன்று, இவ்வாறு விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு ஒரு சிலர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒரு சிலர் போட்டி போட்டு மனைவியை வாடகைக்கு பெற முன் பதிவு செய்து வருகிறார்களாம்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், 'வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் விலை 6000 டாலர்கள் மட்டுமே என குறிப்பிட்டு ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக சர்வீஸ் சார்ஜ் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளதோடு பல எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...