அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் மரணம்!

டிசம்பர் 01, 2018 625

வாஷிங்டன் (01 டிச 2018): அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் HW புஷ் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார்.

அமெரிக்காவின் நீண்ட கால அதிபராக செயல்பட்டவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்.. இரண்டாவது உலக போரின் போது அமெரிக்க சார்பில் போரிட்ட வீரர், பின் நாளில் அமெரிக்க அதிபராக உயர்ந்தவர் திறன்பட செயல்பட்டவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ். அமெரிக்க அதிபராக மேலும் துணை அதிபராக ஜனவரி 20, 1989 முதல் ஜனவரி 20, 1993 வரை செயல்பட்டவர்.

அதற்கு முன் ஜனவரி 20, 1981 – ஜனவரி 20, 1989 வரை துணை அதிபராக செயல்பட்டவர். அதோடு மத்திய புலனாய்வு இயக்குனர் ஜனவரி 30, 1976 – ஜனவரி 20, 1977 வரை செயல்பட்டவர். இது போல பல உயர்மட்ட அரசியல் பணி, அரசு சார்ந்த பணியை செய்தவர் ஜார்ஜ் HW புஷ்.

டொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது ஜார்ஜ் HW புஷ் துணை அதிபராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...