அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் திடீர் ராஜினாமா!

டிசம்பர் 21, 2018 506

வாஷிங்டன் (21 டிச 2018): அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் திடீரென ரஜினாமா செய்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடக்கிறது. இந்நிலையில் அங்கு அமெரிக்க பாதுகாப்புப் படைகள் அங்கு உள்ளன. ஆனால் அமெரிக்க படைகளை அங்கிருந்து வாபஸ் பெறப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் ட்ரம்ப் எந்த வித ஆலோசனையும் இன்றி முடிவுகள் எடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...