14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணர்ந்து கர்ப்பம் - அதிர்ச்சி தகவல்!

ஜனவரி 05, 2019 639

நியூயார்க் (05 ஜன 2019): அமெரிக்காவில் 14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணரப்பட்டு கர்ப்பமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி கடந்த 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்த பெண்ணின் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...