கேளிக்கை விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி!

ஜனவரி 05, 2019 548

வாஷிங்டன் (05 ஜன 2019): அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் சுமார் 40,000 பேர் துப்பாக்கி சூடு தொடர்புடைய சம்பவங்களில் பலியானமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...