முஸ்லிம்களுக்கு சீன அரசு அதிர்ச்சி உத்தரவு!

ஜனவரி 07, 2019 813

பெய்ஜிங் (07 ஜன 2018): சீனாவில் வாழும் முஸ்லிம் மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென்று இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் முஸ்லிம்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கம்யூனிச நாடான சீனாவில் இஸ்லாமிய மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றிய 10 லட்சம் பேர் அரசு முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரம்ஜான் நோன்பு இருப்பது, தொழுகையில் ஈடுபடுவது, ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது போன்றவை சீனாவில் தண்டனைக்குரிய குற்றம்.

ஜின் பிங் இரண்டாவது முறையாகச் சீனா அதிபராகப் பதவியேற்ற பிறகு சீனமயமாக்கல் திட்டத்தை அமல்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிற இன மக்களையும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, அரசியல், சித்தாந்தம், மதம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் சீன நாட்டுப் பண்பாட்டைப் பின்பற்றும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சீனாவில் 2 கோடி இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். இந்த கம்யூனிச நாட்டில் புத்த மதம், டாவோயிஸம், கத்தோலிக்கம், புரோட்டஸ்டன்ட், இஸ்லாம் ஆகிய 5 மதங்களே அங்கீகரிக்கப்பட்ட மதப் பிரிவுகள். இதில், உய்குர் பிரிவு இஸ்லாமிய மக்களைப் பிரிவினைவாதிகளாகவும் தீவிர மதப்பற்று கொண்டவர்களாகவும் சீனா கருதுகிறது.

இது தொடர்பாக சீனாவைச் சேர்ந்த 8 இஸ்லாமிய சங்கப் பிரதிநிதிகளுடன் சீன அரசு அதிகாரிகள் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்படி, ஜின் ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன இஸ்லாம் மக்களைப் படிப்படியாக சீன கலாசாரத்துக்கு மாறிக்கொள்ள பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...