போர் தற்கொலைக்கு சமம் - இந்தியா மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு!

ஜனவரி 08, 2019 456

இஸ்லாமாபாத் (08 ஜன 2019): இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுமேயானால் அது தற்கொலைக்கு சமம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்து குறித்து இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இம்ரான் கான், அமைதி பேச்சுவார்த்தைக்கு நான் அழைப்பு விடுத்தேன் ஆனால் இந்தியா அதனை ஏற்கவில்லை. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கிடையே போர் நடைபெறுமேயானால் அது தற்கொலைக்கு சமமானது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...