நவாஸ் செரீப் உடல் நிலை பாதிப்பு - மகள் தகவல்!

ஜனவரி 12, 2019 111

லாகூர் (12 ஜன 2019) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளதாக அவரது மகள் மர்யம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

அல் -அஸிஸியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது மகள் மர்யம் நவாஸ் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “ நவாஸ் ஷெரீப்புக்கு கையில் வலி ஏற்பட்டுள்ளது. இது ஆன்ஜினா( இதய நோய்)வாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதய மருத்துவ நிபுணர்கள் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்து இருந்தார்.

ஆனால், மர்யம் நவாஸ் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சிறைத்துறை மருத்துவர்கள், நவாஸ் ஷெரீப்பின் உடல் நலம் சீராக உள்ளது. அவரது உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...