இணையம் மூலம் பிலிப்பைன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் முஸ்லிமாக மாறிய அமெரிக்கர்!

ஜனவரி 13, 2019 595

மணிலா (13 ஜன 2019): ஆன்லைன் விளையாட்டில் பிலிப்பைன் நாட்டு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அமெரிக்கர் ஒருவர் முஸ்லிமாக மாறி அதே பெண்ணை திருமனம் செய்து கொண்டுள்ளார்.

23 வயது பிலிப்பைன் நாட்டை சேர்ந்த பெண் சமாரா. இவர் சவூதியில் பணிபுரிகிறார். இவர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் லாஸ் வேகாஸை சேர்ந்த ட்ரிஸ்டான் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சமாரா பிலிப்பைன் சென்றபோது ட்ரிஸ்டானும் பிலிப்பைன் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போதே அவர் ட்ரிஸ்டன் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை சமாரா தனது சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...