பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜனவரி 19, 2019 289

பெரு (19 ஜன 2019): பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெரு நாட்டில் நேற்று இரவு 9.26 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.6-ஆக பதிவாகியுள்ளது. ஆனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இதேபோல் கடந்த வருடம் ஜனவரி மாதம் 14-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1-ஆக பதிவானது. இதனால் அப்போது இரண்டு பேர் இறந்தும் மற்றும் 120-க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...