இந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை!

ஜனவரி 21, 2019 365

காத்மாண்டு (21 ஜன 2019): ரூபாய் 100 க்கும் அதிகமாக மதிப்பிலான இந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். 5 முதல் 8 நாட்கள்வரை அங்கு தங்கியிருக்கும் அவர்கள் சராசரியாக 11 ஆயிரம் ரூபாய்வரை அங்கு செலவிடுகின்றனர்.

இதற்கிடையே நேபாளம் நாட்டில் உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் இதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிக்க நேபாளம் மந்திரிசபை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தது.

எனவே, பெரிய மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுக்கு தடை விதித்தால் அன்னியச் செலாவணியாக டாலர் அல்லது யூரோக்களை வாங்குவதில் பண இழப்பும் சிரமும் ஏற்படும். அதனால் இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், நேபாள ராஷ்டிர வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் 200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் இருக்கும் வங்கிகள், நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...