ஆப்பிள் நிறுவன ரகசியம் கசிவு - ஆப்பிள் ஊழியர் கைது!

ஜனவரி 31, 2019 413

நியூயார்க் (31 ஜன 2019): ஆப்பிள் நிறுவன ரகசியத்தை சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு விற்க முயன்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

செல்போன் மற்றும் கணினிகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆப்பிள். இந்நிறுவன தொழில் நுட்ப ரகசியங்கள் மிகவும் பாதுகாப்பானது.

இந்நிலையில் இதன் ரகசியத்தை சீனாவின் ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்காக அதன் தொழில் நுட்ப ரகசியங்களுடன் சீனா செல்ல முயன்ற ஆப்பிள் ஊழியர் அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு ஊழியரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...