சீன அரசு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் - துருக்கி எச்சரிக்கை!

பிப்ரவரி 10, 2019 554

இஸ்தான்பூல் (10 பிப் 2019): சீனாவில் சிறுபான்மை இனக் குழுவான உய்கர் இன முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும் என்று துருக்கி எச்சரித்துள்ளது.

சீனாவில் உள்ள உய்கர் இன மக்கள் துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் சீனாவின் வட மேற்கு பிராந்தியமான ஷின்ஜியாங் பிராந்தியத்தில் அதிகமாக வசிக்கக்கூடியவர்கள். ஷின்ஜியாங் பிராந்தியம் தற்போது சீன அதிகாரிகளின் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹமி அக்சாய் வெளியிட்ட அறிக்கையில், "மில்லியன் கணக்கான துருக்கிய முஸ்லிம்கள் வலுக்காட்டாயமாக கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சித்ரவதைக்கும், ஆளாகின்றனர்.

இவர்கள் மீதான தாக்குதலை சீன அரசு நிறுத்த வேண்டும். மேலும் அவர்கள் மீது கடைபிடிக்கப்படும் கொள்கைகளும் மனிதத்தன்மைக்கு எதிரானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...