20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை!

பிப்ரவரி 21, 2019 367

டாக்கா (21 பிப் 2019): வங்கதேசத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஆபாச இணையதளங்களால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் முஸ்தபா ஜப்பார், ஆபாச இணையத்தைப் பார்ப்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

மேலும் டிக் டாக் செயலியும் தவறான பழக்கத்திற்கு வித்திடுவதாகவும், அதனையும் தடை செய்ய தெற்காசிய நாடுகள் முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...