இரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு!

பிப்ரவரி 22, 2019 403

இஸ்லாமாபாத் (21 பிப் 2019): பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசு ஜமா-உத்-தாவா மற்றும் ஃபலா-இ-இன்சானியாத் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

வியாழன் அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கமியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தீவிரவாதத்துக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை விரிவாக மறு ஆய்வு செய்ததாகவும், பாகிஸ்தான் உள்விவகாரங்கள் துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஹஃபீஸ் சயீத் ஜமா-உத்-தாவா அமைப்பின் தலைவராக உள்ளார். ஜமா-உத்-தாவாவின் தொண்டு நிறுவனமாக ஃபலா-இ-இன்சானியாத் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...