காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பவரே நோபல் பரிசுக்கு தகுதியானவர்: இம்ரான் கான்!

மார்ச் 04, 2019 431

இஸ்லாமாபாத் (04 மார்ச் 2019): காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுவித்ததை அடுத்து இம்ரான் கானுக்கு பாகிஸ்தானில் ஆதரவு பெருகி வருகிறது. உலக நாடுகளிலும் பலர் இம்ரான்கானை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான்கான், "நான் நோபல் பரிசுக்கு தகுதியானவன் கிடையாது. அதேவேளை காஷ்மீர் பிரச்சனையை அமைதியாகவும், சுமூகமாகவும் தீர்ப்பவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்." என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...