ஆண் குறியை பதம் பார்த்த துப்பாக்கி!

மார்ச் 10, 2019 219

இண்டியானா (10 மார்ச் 2019): இண்டியானாவை சேர்ந்த ஒரு நபர் தாறுமாறாக துப்பாக்கியை கையாண்டதின் விளைவு, அவருடைய ஆண்குறியையே அது பதம் பார்த்துள்ளது.

இண்டியானாவை சேர்ந்த 46 வயது நபர் மார்க் ஆண்டனி ஜோன்ஸ், தனது காலை நேர நடைபயிற்சியின் போது, வழக்கமாக தான் எடுத்துச் செல்லும் 9எம் எம் கைத்துப்பாக்கி தனது இடுப்புப் பகுதியில் இருந்து கீழே விழ பார்த்துள்ளது. அதனை கீழே விழாமல் தடுக்க நினைத்த போது அவரது கை எதிர்பாராதவிதமாக ட்ரிகரில் பட்டு அவரது ஆண் குறியை பதம் பார்த்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள மரியன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால், உயிர் பிழைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...