149 பயணிகளுடன் புறப்பட்ட 6 வது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்!

மார்ச் 10, 2019 556

நைரோபி (10 மார்ச் 2019): 149 பயணிகளுடன் சென்ற எத்தியோப்பியன் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

எத்தியோப்பியாவின் ஆடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற போயிங் -737 ரக விமானம் விழுந்து நொறுங்கியது. விமான விபத்துக்குள்ளானது குறித்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆடிஸ் அபாபாவுக்கும் - நைரோபிக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆடிஸ் அபாபா சர்வேத விமான நிலையத்தில் இருந்து காலை 08.38 மணிக்குப் புறப்பட்ட விமானமானது 8.44 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை உயிரோடு இருப்பவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த விமானம் எத்தியோபிய தலைநகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷோஃப்டு (Bishoftu) என்ற இடத்தில் விழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...