நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதி மிகவும் புகழ் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், இந்த மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டினரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்த நியூசி பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ஆறுதல் கூறினார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள், மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.